www.garudabazaar.com

கடலுக்கு அடியில ‘யானை’ பட போஸ்டரா?!.. அருண் விஜய் ரசிகர்கள் செய்த அசத்தல் காரியம்.. Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண்விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கும் ‘யானை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

arun vijay fans releases yaanai poster under sea water

குடும்ப கதையோடு ஆக்‌ஷன் கலந்து தயாராகும் இப்படத்தின் போஸ்டரை பாண்டிச்சேரியை சேர்ந்த அருண் விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும்  வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்கி வரும் படத்துக்கு யானை என பெயரிட்டார்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான ‘சிங்கம்’ பட வரிசைகள் பம்பர் ஹிட்டானது. இந்நிலையில் ‘யானை’ என பெயரிடப்பட்டுள்ள அருண் விஜய்யின் திரைப்படம் ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில்  சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது.

இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட, படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க விறுவிறு திரைக்கதையில்,  நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு GV. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். Drumstick Productions எஸ்.சக்திவேல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை G.அருண்குமார் இணைந்து தயாரிக்கிறார்.

மக்கள் தொடர்பு: ஜான்சன்.

Also Read: "ஒரு பரீட்சை உங்க உயிரை விட பெருசு இல்ல".. சூர்யா உருக்கமாக பேசி வெளியிட்ட பரபரப்பு Video!

arun vijay fans releases yaanai poster under sea water

People looking for online information on Arun Vijay, Hari will find this news story useful.