Reliable Software
www.garudabazaar.com

'அஜித்தின்' வலிமை.. தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்ட போனி கபூர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

Boney Kapoor Ajtih Valimai theatrical release recent update

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். இதனைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் யுவன் இசையில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வலிமை அப்டேட் என்ன என்று ஒரு வருட காலத்துக்கும் மேலாக அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக போனி கபூர் தகவல் வெளியிட்டார்.

Boney Kapoor Ajtih Valimai theatrical release recent update

அதன்படி, இந்த திரைப்படத்தின் நிறைவு கட்ட பணிகள் அனைத்துமே கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக போனி கபூர் அண்மையில் ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். போனி கபூரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியாக அமைந்ததை அடுத்து, மே 1-ஆம் தேதி முதல் இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீட்டு உரிமத்தை பற்றிய முக்கிய தகவல்களை தமது ட்விட்டர் பக்கத்தில் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். அந்த தகவலின்படி வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக போனி கபூர் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அஜீத் ரசிகர்கள் இப்போதிலிருந்தே திரையரங்கில் வெளியாகவிருக்கும் வலிமை திரைப்படத்தை காண்பதற்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor Ajtih Valimai theatrical release recent update

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, ThalaAjith, Valimai, ValimaiUpdate, Zee Studios will find this news story useful.