பிரபல நடிகைக்கு அழகான குழந்தை பிறந்தது... மகளுடன் வெளியிட்ட போட்டோ... வாழ்த்தும் ரசிகர்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்மலையாளம் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பியர்ல் மானே (Pearle Maaney), ஸ்ரீநிஸ் அரவிந்த் (Srinish Aravind). இருவரும் நிகழ்ச்சியின் காதலிக்க தொடங்கினர். இருவரும் அந்நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். மலையாளாத்தில் மிகவும் பிரபலமான விஜே மற்றும் நடிகையான இவர் தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![Popular valimai actress gives birth to baby பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது Popular valimai actress gives birth to baby பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-valimai-actress-gives-birth-to-baby-news-1.jpg)
இந்நிலையில் கடந்த வருடம் பியர்ல் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்திருந்தார். அதில், "இரண்டு வருடங்களுக்கு பிறகு காதலை பகிர்ந்து கொண்டோம் என்றும் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்" எனவும் பதிவு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு நஸ்ரியா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் பியர்ல் மானே தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.அவர் கூறும்போது "எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த அழகான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது எங்களுடைய முதல் புகைப்படம். குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் எனது குடும்பத்தாருடன் இதை பகிரவே விரும்பினேன். அது நீங்கள் தான். உங்க ஆசிர்வாதம் வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.