Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

“தேர்தல்ல ஜெயிச்சா.. வலிமை அப்டேட்!” - பாஜக வேட்பாளரின் ‘பறக்கும்’ ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை அப்டேட் பற்றி பாஜகவின் தமிழக தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களிடையே வைரல் ஆகிறது.

Valimai Update BJP Vanathi Srinivasan TNElections2021 வலிமை

அண்மைக்காலமாக தல அஜித்தின் ரசிகர்கள் பலரும் வலிமை படம் தொடர்பான அப்டேட் கேட்டு வந்தனர். எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷப் பணிகள் விரைவில் நடைபெறும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அதே சமயம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் பிரமுகர்கள் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில்  தமிழக பாஜக தேசிய செயலாளர் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட் ஒருவர் ட்விட்டரில் கேட்க, அதற்கு வானதி சீனிவாசன்,‘நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி!’ என்று குறிப்பிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக பாஜக வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.ஜனநாதன் காலமானார்! இயற்கை, பேராண்மை, லாபம் படங்களை இயக்கியவர்.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Update BJP Vanathi Srinivasan TNElections2021 வலிமை

People looking for online information on Ajith Kumar, Valimai, Vanathi srinivasan will find this news story useful.