MKS Others
www.garudabazaar.com

ரஜினியை திடீரென வீட்டுக்கே போய் சந்தித்த சசிகலா.. கலகலத்த போயஸ் கார்டன்! பின்னணி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:   நடிகர் ரஜினிகாந்த்தை  சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று சசிகலா சந்தித்து பேசினார். மரியாதை நிமர்த்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில்  சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பினார். சசிகலா சென்னை திரும்பும் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதில் இருந்து மீண்ட சசிகலாவின் உடல் நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அப்போது கேட்டறிந்தார். 

Superstar Rajinikanth meets Sasikala at Poes Garden House

இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு  முடிந்த பின்னர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றார். உடல் நலம் குணம் அடைந்து நடிகர் ரஜினிகாந்த்  சில வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார் . இதையடுத்து இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து சசிகலா வாழ்த்து கூறினார் சசிகலா. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார்.  திடீரென சசிகலா ரஜினியை சந்தித்து நலம் விசாரித்ததால் போயஸ் கார்டன் கலகலத்து போனது. நடிகர் ரஜினிகாந்த், சசிகலா சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமர்த்தமானது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Superstar Rajinikanth meets Sasikala at Poes Garden House

ஜெயலலிதா காலத்தில் எப்போதுமே போயஸ் கார்டன் பரபரப்பாக இருக்கும்,. ஏனெனில் ஜெயலலிதா அங்கு வசித்தார். அப்போது சசிகலாவுடன் உடன்இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா போயஸ் கார்டன் பரபரப்பாக இல்லை. மிக அமைதியாக காணப்படுகிறது. இந்த சூழலில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை சசிகலா சந்தித்ததால் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth meets Sasikala at Poes Garden House

People looking for online information on சசிகலா, போயஸ் கார்டன், ரஜினி, லதா ரஜினிகாந்த், Rajinikanth, Sasikala will find this news story useful.