IKK Others
MKS Others
www.garudabazaar.com

"சிரிப்பு க்யூட்".. "உங்க fan".. பாவனி & அமீர் உரையாடலை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக கோரியோகிராபர் அமீர் வந்தார்.

priyanka viral reaction for ameer pavani chat biggbosstamil5

விஜய் டிவியில் கோரியோகிராபராக புகழ்பெற்ற அமீர், விஜய் டிவியில் பணிபுரியும் பிரியங்கா உள்ளிட்டோர் மத்தியில் மிகவும் நெருக்கமானவராக இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அவர் சில நாட்கள் அமைதியாக இருந்தாலும், தற்போது அனைத்து டாஸ்க் மற்றும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

பிரியங்காவை அக்கா என கூப்பிடும் அமீர், பிரியங்கா அருகிலிருந்த பாவனியிடம் சென்று சிரித்து சிரித்து பேச தொடங்கினார். அதன்படி, “நான் உங்கள் ரசிகன் என்று சொல்லும்போது நீங்கள் ஒரு சிரிப்பு சிரித்தீர்களே.. அது..” என்று அமீர் பேசிக்கொண்டிருக்க, மீண்டும் பாவனி, “நான் உங்கள் ஃபேன்!” என்று கூறுகிறார்.

மேலும் பாவனி க்யூட்டாக சிரிப்பார் என்று அமீர் பிரியங்காவிடம் கூற, பிரியங்காவோ, “ஐயகோ இதையெல்லாம் நான் பார்க்க வேண்டுமா? நான் வீட்டை விட்டு போறேன். சுயமா நாமினேட் செய்துக்க முடியாதா?” என்று தலையில் அடித்துக் கொள்கிறார். அதன் பிறகு அமீரிடம், பிரியங்கா,“நீங்கள் வேண்டுமானால் இருவரும் தனியாக பேசிக் கொள்ளுங்கள்! நான் அந்த பக்கம் போறேன்” என்று நழுவ முயற்சிக்கிறார்.

அப்போது அமீர், “அக்கா நீங்கள் இருங்கள் அப்போதுதான் எனக்கு கொஞ்சம் கான்ஃபிடன்ட் வருகிறது” என்று சொல்ல, மீண்டும் பிரியங்கா, “அடப்பாவமே முதலில் ஃபிரண்டு என்றார்கள், பிறகு அக்கா என்றார்கள், இப்போது என்ன இப்படி ஆக்கிவிட்டார்கள்?” என்பது போல் ஒரு சிறிய தலையணையை எடுத்து கக்கத்தில் வைத்து காட்டினார்.

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே டான்ஸ் ஆடிக் கொண்டு தெறியாக, என்ட்ரி கொடுத்த அமீர் போட்டியாளர்களையும் ஆடவைத்தார். அதன் பின்னர் நடந்த பள்ளிக்கால நினைவுகள் டாஸ்க்கில் அனைவருக்கும் நடனமாட சொல்லித்தரும் நடன ஆசிரியராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

priyanka viral reaction for ameer pavani chat biggbosstamil5

People looking for online information on Ameer, Ameer biggbosstamil5, Amir, Amir biggbosstamil5, BiggBoss5, BiggBossTamil5, Pavani ameer, Pavani amir, Pavani Reddy, Priyanka, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.