''இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும்...'' - 'பிகில்' தயாரிப்பாளர் பகிர்ந்த மீம்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, அதனால் மக்கள் மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது.

இது தொடர்பாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் அரசால் கூறப்பட்டு வருகிறது. மேலும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்கள் சமூக வலைதளப்பதிவுகளில் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
கொரோனோ தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால் யாரிடமும் நெருங்கி பழகாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும்விதமாக 'வின்னர்' பட காமெடியில் 'இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்' என வடிவேலு சொல்லும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
#JanthaCurfew pic.twitter.com/jFgRlZw2wV
— Archana Kalpathi (@archanakalpathi) March 19, 2020