www.garudabazaar.com
www.garudabazaar.com

படத்தில் கொடூர வில்லன்... நிஜத்தில் அதிரடி போலீஸ்... பதவி உயர்வு பெற்ற சாதனை பிகில் பட நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் சக நடிகர் கேரள போலீசில் பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், இந்த செய்தி நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. தனது முகத்திலேயே வில்லத்தனத்தை காட்டி மிரட்டும் பிரபல வில்லன் நடிகரான ஐஎம் விஜயன் தான் அது. அவர் ஒரு காவல் துறை அதிகாரி என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

bigil actor success as police officer அதிரடி போலீஸ் பிகில் பட நடிகர்

பிரபல கால்பந்து வீரரான விஜயன், பல ஆண்டுகளாக கேரள போலீஸ் சார்பில், பல இடங்களில் நடந்த கால்பந்து போட்டிகளில் ஏராளமான கோல்களை அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த பிகில், கொம்பன், திமிரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரள போலீஸ் துறை உதவி கமாண்டன்ட் கேடராக பதவி உயர்வு பெற்றிருக்கும் அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து ள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் விஜயனுக்கு விஜய் ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Vijayan

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

bigil actor success as police officer அதிரடி போலீஸ் பிகில் பட நடிகர்

People looking for online information on Vijayan will find this news story useful.