Reliable Software
www.garudabazaar.com

'பிக்பாஸ் முகினின்' பட்டையை கிளப்பும் புது லுக்!.. வெளியான பரபரப்பு போஸ்டர்! என்ன படம்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் தற்போது திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றனர். 

BiggBoss Tamil Mugen Rao NEW look from Velan movie

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்மையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 

இதன் முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்திகா மற்றும் 3வது சீசனில் முகின் ராவ் வெற்றி பெற்றனர். 4வது  சீசனில் நடிகர் ஆரி டைட்டில் கார்டினை வென்றார். இந்நிலையில் லாஸ்லியா, கவின், ரியோ, ஆரவ், ஆரி, ஷனம் ஷெட்டி என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் படங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். அண்மையில் லாஸ்லியா ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஃப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார்.

இதேபோல் கவின் நடிப்பில் அண்மையில் சிவாங்கி பாடி வெளியான அஸ்கு மாரோ பாடல் ஹிட் அடித்தது. இந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் டைட்டில் கார்டு வென்ற முகின் ராவ் நடிக்கும் வேலன் திரைப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், கிராமத்து கெட்டப்பில் முகின் ராவ் வேற லெவலில் மாஸாக இருக்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக வெப்பம் திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் முகின் ராவ் வெற்றி எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போது முகின் ராவ் நடிக்கும் வேலன் படத்தை கவின் மூர்த்தி இயக்க, இந்த படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

ALSO READ: “அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களும் உயிர்வேட்டை ஆடுகின்றன!” - அருண்ராஜா காமராஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Tamil Mugen Rao NEW look from Velan movie

People looking for online information on BBTamil, Biggbosstamil, BiggBossTamil3, Mugen Rao will find this news story useful.