www.garudabazaar.com

அம்மி அரைக்க விடுறேன்னு சொன்ன பாலா.. ஆனா, அரைச்சது என்னமோ அவர்தான்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பாலாஜியின் செயல் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

பிக்பாஸ் போட்டி தகவல் | Biggboss tamil 4 balaji's activity turns fans to appreciate

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியில் பாலாஜியின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இன்று நிஷா அம்மியில் மசாலா அரைப்பதை பார்த்த அவர், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். 

பிக்பாஸ் போட்டி தகவல் | Biggboss tamil 4 balaji's activity turns fans to appreciate

பிறகு, அவரே அம்மியில் அரைக்கவும் செய்தார். சில தினங்களுக்கு முன்னர், போட்டியாளர்களை அம்மி அரைக்க விடுகிறேன் என கோபத்தில் பாலாஜி பேசியது, வீட்டுக்குள் விமர்சனத்திற்குள்ளானது. 

இதை தொடர்ந்து, அம்மி அரைப்பது ஒன்றும் பெண்களுக்கான வேலை இல்லை., அதில் இருக்கும் நன்மைகளை ஆண்களும் எடுத்து கொள்ள வேண்டும், நானே முதலில் அதை துவங்கி வைக்கிறேன் என அவர் அம்மி அரைத்தது ரசிகர்களை அட போட வைத்திருக்கிறார் பாலா. 

 

பிக்பாஸ் போட்டி தகவல் | Biggboss tamil 4 balaji's activity turns fans to appreciate

People looking for online information on Balaji Murugadoss, BiggBoss Tamil 4 will find this news story useful.