www.garudabazaar.com
www.garudabazaar.com

சுரேஷ் தாத்தாவுக்கு அடித்த லக்... பிரபல இயக்குனரிடம் கிடைத்த சான்ஸ்... யார் ஹீரோ தெரியுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின்  'அழகன்' படத்தில் அறிமுகமானார். பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்.

biggboss suresh in a biggie project சுரேஷ் தாத்தாவுக்கு அடித்த லக்

இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பல ரெசிபிக்களை அவர் செய்து அசத்தியுள்ளார். சன் டிவியில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். திடீர் திருப்பங்களுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிக்பாஸ் ஆரம்பித்த காலத்தில் பலரது கவனத்தைப் பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதில் மூத்தவராக இருந்தாலும் தனது அதிரடி யுத்திகள் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சுரேஷ் தாத்தா அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Suresh

biggboss suresh in a biggie project சுரேஷ் தாத்தாவுக்கு அடித்த லக்

People looking for online information on Suresh will find this news story useful.