RRR Others USA
www.garudabazaar.com

"நம்பி Nominate பண்ணோமேயா பெருசு!".. மொத்த ஹவுஸ்மேட்ஸ்க்கும் கடைசில விபூதி அடிச்ச BiggBoss!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்கள் அனைவரையும் சக போட்டியாளரை  நாமினேட் செய்யும்படி சொன்ன பிக்பாஸ், டாஸ்க் முடிந்ததும் கடைசியில் செய்துள்ள ட்விஸ்ட் அனைவரையும் உறையவைத்துள்ளது.

BiggBoss pre written message after all contestants nominatation

ஃபினாலே ரேஸ்

84 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில், போட்டியாளர்கள் அனைவரும் ஃபினாலே ரேஸை நோக்கி தீவிரமாக ஆடி வருகின்றனர். இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், இதன் பொருட்டு ஒவ்வொரு போட்டியாளர்களுமே சக போட்டியாளர்கள் 2 பேரை காரணத்துடன் எவிஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டும்.

நாமினேஷன் ப்ரோசஸ்

இதில் தாமரை பாவனியையும் நிரூப்பையும் நாமினேட் செய்தார். இதற்கு காரணமாக முன்னதாக பாவனி இந்த வீட்டில் அதிக நாட்கள் இருப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பது போல் இருந்த்தாக தாமரை குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் நிரூப்பை நாமினேட் செய்ததற்கும் தாமரை காரணம் கூறினார்.

அதன்படி, நிரூப், பிரியங்காவிடம் இந்தமுறை, அப்படி பேசியது தனக்கு பிடிக்கவில்லை என தாமரை குறிப்பிட்டிருந்தார். முன்னதாக பிரியங்காவிடம் நிரூப் பேசிய பலவற்றால் பிரியங்கா மனம் கஷ்டப்படுவதாக கூறி அழுதுள்ளார். இந்த முறை பிரியங்கா நிரூப்பையும் சஞ்சீவையும் நாமினேட் செய்தார்.

அதற்கு பிரியங்கா சொன்ன காரணம், “நிரூப் எத்தனையோ விஷயங்களை இறங்கி பேசி டீல் செய்யும்போது, அவன் என்னுடைய ஃபிரண்டாக என் விஷயத்தில் என்னுடனான உறவுச்சிக்கலை சரி செய்ய முன்வரவே இல்லை” என்பதை காரணமாக கூறி இருந்தார். இதேபோல் பாவனியை அமீர் நாமினேட் செய்திருந்தார். ராஜூ பாவனியையும், நிரூப்பையும் நாமினேட் செய்திருந்தார்.

ராஜூவுக்கு பிக்பாஸ் கொடுத்த கட்டளை

இப்படி எல்லாரும் நாமினேட் செய்துமுடித்த பின்பு, நம் குசும்புக்கார பிக்பாஸ், பிக்பாஸ் வீட்டின் இன்னொரு குசும்புக்கார பிரஜையான ராஜூவை அழைத்து, அங்கிருந்த பெட்டியில் இருக்கும் சீட்டை பிரித்து அதில் இருக்கும் தகவலை படிக்க சொல்ல, ராஜூவும் நம்பி எடுத்து படித்தார். அதில் நம் ‘பெருசு’ பிக்பாஸ்.. அனைவருக்கும் ஒரு ஆச்சர்யமான ட்விஸ்ட்டை வைத்திருந்தார்.

ஆம், அனைத்து போட்டியாளர்களும் கஷ்டப்பட்டு ஏகவசனம் பேசி, ஒவ்வொருவரையும் நாமினேட் செய்தனர்.

’குசும்புக்கார’ பிக்பாஸ்

ஆனால் சிம்பிளாக நம் பிக்பாஸ் அந்த சீட்டில், ‘இந்த வாரம் நீங்கள் அனைவரும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்படுகிறீர்கள்! ஆல் தி பெஸ்ட்!” என எழுதி அங்கிருந்த பெட்டகத்தில் வைத்திருந்திருக்கிறார். அதையும் அந்த மனுஷன் ஏற்கனவே எழுதி அங்கு வைத்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட்! நடத்துங்க பிக்பாஸ்.. உங்கள ஒருநாள் நாமினேட் பண்ணனும்!

Also Read: "Emotional-ஆ நான் இத அனுபவிக்கணும்னு நெனைக்கிறீங்க?".. பிரியங்காவை Nominate செய்த சஞ்சீவ்!

BiggBoss pre written message after all contestants nominatation

People looking for online information on BiggBoss15, BiggBoss5, Biggboss5 tamil, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Priyanka, Raju, Thamarai, Vijay tv will find this news story useful.