"மிஸ் யூ அப்பா" - பிக்பாஸ் முகேன் உருக்கம்... தந்தையின் நினைவாக வெளியிட்ட வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். பலரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர் பின்பு அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக முடி சூடினார். இவர் மலேசியாவில் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார், மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

முகேனின் 'சத்தியமா நான் சொல்லுறேண்டி' பாடல் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம் ஆகியது. முகேனின் தந்தை பிரகாஷ் ராவ்வும் பாடகர் தான். சமீபத்தில் அவர் நெஞ்சு வலி காரணமாக காலமானார்.
முகேன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது தந்தை பாடல் பாடும் அந்த வீடியோவில் அவர் இளையராஜாவின் 'கண்ணே கலைமானே' பாடலை பாடுகிறார். அதற்கு மேல் " மிஸ் யூ அப்பா" என்று பதிவிட்டுள்ளார்.
Tags : Mugen, Bigg Boss 3, Tamil, Prakash Rao