"இத யாரும் எதிர்பார்க்கலயே" "Thalapathy66" படத்தில் பிக்பாஸ் பிரபலம்.. நடிகை Photo'வோட வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் கடைசியாக நடித்திருந்த நடிகர் விஜய், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத "தளபதி 66" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

Also Read | ஒரு பக்கம் ஹிந்தி வெப் சீரிஸ்?.. மறுபக்கம் வரலட்சுமி படத்தில் 'Hero'.. அசத்தும் BiggBoss பிரபலம்

இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் பூஜை, கடந்த மாதம் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது.

அதே போல, இதன் பூஜையுடன் படத்தின் சில காட்சிகளும் சென்னையில் வைத்து படமாக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

தளபதி 66 நடிகர்கள் யார் யார்?

முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னையில் முடிவடைந்திருந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படடப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் நடிகர் விஜய். இதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன், தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவலை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது.

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

அடுத்தடுத்த அப்டேட்கள்

சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் தளபதி 66 படத்தில் நடித்து வருவது பற்றி அடுத்தடுத்து அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஒருவரும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளது பற்றி, படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

பிக்பாஸ் பிரபலம்

தமிழில் ஒளிபரப்பாகி  வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் சீசனில், நடிகை மற்றும் மாடலான சம்யுக்தா கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் பிரபலம் அடைந்த சம்யுக்தா, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

இதனையடுத்து, தற்போது விஜய்யின் தளபதி 66 திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், சம்யுக்தாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"இத யாரும் எதிர்பார்க்கலயே" "THALAPATHY66" படத்தில் பிக்பாஸ் பிரபலம்.. நடிகை PHOTO'வோட வெளியான அறிவிப்பு வீடியோ

biggboss fame Actress Samyuktha on board for thalapathy 66

People looking for online information on Biggboss fame Actress Samyuktha, Thalapathy 66, Thalapathy 66 Movie updates, Vijay will find this news story useful.