பிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்... மிரள வைக்கும் ஏலியன் டீசர்... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான்.

biggboss aari next film in alien conceptபிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்கிறார். இப்படத்தை கவிராஜ் இயக்கும் இப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரித்துள்ளார்.

மேலும், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். நியு ஏஜ் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் ஏலியன்கள் தொழில்நுட்பத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்... மிரள வைக்கும் ஏலியன் டீசர்... செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Aari

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss aari next film in alien conceptபிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்

People looking for online information on Aari will find this news story useful.