"ஆரி அண்ணா உங்க நேர்மை"... ஆதரவற்ற குழந்தைகளை கவர்ந்த ஆரி... ரசிகர்கள் நெகிழ்ச்சி செயல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான். ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று சில வாரங்கள் இருந்தார். ஆனால் அதன் பின்பு போட்டியாளர்கள் செய்த சில குறைகளை தைரியமாக குறிப்பிட்டார். அந்த தருணம் தான் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு அடுக்கடுக்காக அவரது ஒவ்வொரு செயல்களும் பலரையும் கவர்ந்தது.

aari inspire little children ஆதரவற்ற குழந்தைகளை கவர்ந்த ஆரி

இந்நிலையில் அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆரியின் ரசிகர்கள் நெகிழ்ச்சியான விஷயம் ஒன்றை செய்துள்ளனர். அருகிலிருக்கும் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கு அவர்களுக்கு கேக் உடன் உணவு வழங்கியுள்ளனர். குழந்தைகள் பேசும் போது "ஆரி அண்ணா வாழ்த்துக்கள். எங்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் நேர்மை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் நேர்மையை நாங்கள் கடைபிடிப்போம். நீங்கள் எங்களுக்கு ஒரு ரோல் மாடல். வாழ்த்துக்கள் அண்ணா" என்று குழந்தைகள் பேசுவதை பார்க்க முடிகிறது. மனதை உருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Aari

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

aari inspire little children ஆதரவற்ற குழந்தைகளை கவர்ந்த ஆரி

People looking for online information on Aari will find this news story useful.