"எனக்கு உடல்நிலை சரியில்ல"... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆரி... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான். ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று சில வாரங்கள் இருந்தார். ஆனால் அதன் பின்பு போட்டியாளர்கள் செய்த சில குறைகளை தைரியமாக குறிப்பிட்டார். அந்த தருணம் தான் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு அடுக்கடுக்காக அவரது ஒவ்வொரு செயல்களும் பலரையும் கவர்ந்தது.

aari video message for his fans ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆரி

இப்படி பிரபலங்கள் மற்றும் வெகுஜன மக்களை கவர்ந்திழுத்த ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போது மக்களை சந்திக்க வருவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். பலரும் அவரது பதிவுகளில் எப்பொழுது எங்களை சந்திக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆரி.

அந்த வீடியோவில் அவர் "உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தேன். ஆனால் டிக்கெட் டு பினாலே நாளிலிருந்தே எனக்கு உடல்நிலை சரியில்லை. இன்னும் சரியாகவில்லை. சீக்கிரம் உங்களை சந்திக்க வரவேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெகுவிரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வேன்.  இது என்னுடைய வெற்றி அல்ல, நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. ஒரு சகோதரனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என் அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Tags : Aari

தொடர்புடைய இணைப்புகள்

aari video message for his fans ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆரி

People looking for online information on Aari will find this news story useful.