www.garudabazaar.com

சீரியஸ் விசாரணை நடுவே சிரிப்பை அடக்க முடியாத போட்டியாளர்கள்..! எல்லாம் ஒரு 'ஈ' பண்ண வேலை.. BiggBoss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss 6 Tamil Contestants starts laughing in court Task

Also Read | "கேஸை மைனா கிட்ட கொடு".. அசீமுக்கு ஐடியா கொடுத்த அமுதவாணன்.. ஷாக் ஆன மைனா..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss 6 Tamil Contestants starts laughing in court Task

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss 6 Tamil Contestants starts laughing in court Task

தற்போது நீதிபதியாக ADK இருக்கிறார். ஒரு பக்கம், விக்ரமனுக்கான வழக்கறிஞராக ஷிவினும், அமுதவனாணுக்கான வழக்கறிஞராக அசீமும் செயல்படுகிறார். விக்ரமனை அசீம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த போது வித்தியாசமான சத்தம் எழுகிறது. இதனால் ஜூரியாக அமர்ந்திருந்த மணிகண்டன், மைனா ஆகியோர் சிரிக்க நீதிபதியாக இருந்த ADK-வும் ஒருநிமிடம் சிரித்துவிடுகிறார். இடையே, தனலட்சுமியும் விழுந்து சிரிக்கிறார். அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட, ADK ஜூரியாக இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றார்.

BiggBoss 6 Tamil Contestants starts laughing in court Task

மேலும், நீதிவேண்டி வழக்கு தொடுத்தவர்களின் உணர்வை நாம் மதித்து செயல்பட வேண்டும் என்றார். அப்போது, "ஈ அடிக்கடி வந்ததுனால தான்" என மைனா சொல்ல, "பரவால்ல, நம்முடைய உள்ளுணர்வின்படி நடக்க வேண்டும்" என ADK சொல்கிறார்.

 

Also Read | தனலட்சுமியின் வழக்கில் எதிராக மாறிய சாட்சிகள் .. பரபரக்கும் கோர்ட் டாஸ்க்..! Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 Tamil Contestants starts laughing in court Task

People looking for online information on Bigg Boss 6 Court Task, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Vijay Television, Vijay tv will find this news story useful.