www.garudabazaar.com

”ஜூலிக்கு டோஸ் விட்ட பிக்பாஸ்”.. கன்பெஷன் ரூமில் சொன்ன வார்னிங்கே கொடுத்துட்டாரு மனுசன் BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஜூலியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் அனைவரிடமும் மரியாதையாக பேசவேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளார்.

Bigg boss ultimate strict warning to Julie in confession room

காஷ்மீர் இந்துக்களின் கதை.. படத்தை பாராட்டிய பிரதமர்! வரி விலக்கு அளித்த அரசு.. காரணம் இதோ..

பிக்பாஸ் அல்டிமேட்

தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் ஏற்படுத்தியுள்ளன. அந்த சீசன்களின் வெற்றியை அடுத்து இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கமல்ஹாசனின் விலகல்

கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதாக அறிவித்தார். அவருக்கிப் பின் இப்போது சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்புவின் வருகையை அறிந்த போட்டியாளர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Bigg boss ultimate strict warning to Julie in confession room

ஜுலிக்கு பிக்பாஸ் கொடுத்த எச்சரிக்கை

இப்போது பிக்பாஸ் வீடு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி பிக்பாஸ் சீசன் ஒன்றில் தனது செயல்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை அவர மேல் எந்த புகாரும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இப்போது அவர் பிக்பாஸையே கோபப்பட வைத்துள்ளார்.

ஜூலி செய்ய மறுத்த டாஸ்க்

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கோல்ட் காயின் டாஸ்க் விளையாட அவர் மறுத்துள்ளார். அவரை விளையாட சொல்லி பிக்பாஸ் அறிவுறுத்தினார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளாமல் சக போட்டியாளர்களையும் மரியாதையின்றி பேசியுள்ளார். இதனால் பிக்பாஸ் அவரை கன்பெஷன் அறைக்கு அழைத்து ‘ஜூலி இந்த வீட்டில் அனைவரும் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்கிறார்கள். நீங்களும் அதுபோல நடந்துகொள்ள வேண்டும்’ என்று எச்சரிக்கும் விதமாகக் கூறுகிறார். அதற்கு ஜூலி ‘சாரி’ என்று சொல்லி மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும் போது பிக்பாஸ் அவரை போகலாம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். இது சம்மந்தமான வீடியோக்களும் ரசிகர்களின் கமெண்ட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg boss ultimate strict warning to Julie in confession room

ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனம் ஈர்த்து அதன் மூலமாக பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்குள் வந்தார். ஆனால் அந்த சீசனில் அவரின் செயல்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ளாஎர்.

காமெடி பண்ண ஆளு, இப்ப ஃபுல் ரொமான்ஸ்ல.. முத்தம் கேட்டு வெட்கப்பட்ட பரிதாபங்கள் சுதாகர்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss ultimate strict warning to Julie in confession room

People looking for online information on கன்பெஷன் ரூம், ஜூலி, பிக்பாஸ் அல்டிமேட், BB Ultimate, Bigg Boss Ultimate, Confession Room, Strict warning to Julie, Vijay tv will find this news story useful.