காமெடி பண்ண ஆளு, இப்ப ஃபுல் ரொமான்ஸ்ல.. முத்தம் கேட்டு வெட்கப்பட்ட பரிதாபங்கள் சுதாகர்
முகப்பு > சினிமா செய்திகள்"என்னென்ன சொல்றான் பாருங்க.." சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடும் யாராக இருந்தாலும் இந்த வார்த்தையை நிச்சயம் ஏதேனும் ஒரு மீம்ஸ் தொடர்பான வீடியோக்களில் கடந்திருப்போம்.

மொத்த பாலிவுட்டையும் வம்புக்கிழுத்த கங்கனா ரனாவத்! புதிய படம் பற்றிய கருத்தால் சர்ச்சை
அந்த வசனத்தை கேட்டதும் நமது நினைவுக்கு வருபவர் தான் பரிதாபங்கள் சுதாகர். யூடியூப் வீடியோக்கள் மூலம், தன்னுடைய நேர்த்தியான நகைச்சுவையால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர்கள் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர்.
இருவரின் நேர்த்தியான நகைச்சுவை வசனங்கள் மற்றும் டிரெண்டுக்கு ஏற்ற வகையில் இடம்பெறும் காட்சிகள் என அனைத்தும் மீம்ஸ்களுக்கான டெம்பிளேட் ஆகும்.
பரிதாபங்கள் கோபி - சுதாகர்
பல மீம்ஸ்களில், நாம் வைகைப்புயல் வடிவேலுவை பார்ப்பது போல, தற்போது பல மீம்ஸ்களில் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரை பார்க்க முடியும். மிகவும் கஷ்டப்பட்டு, இன்று தமிழக மக்கள் மத்தியில் அதிகம் பெயர் பெற்றுள்ள இந்த இருவரில், சுதாகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண புகைப்படங்கள்
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. அவரது ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திருமணத்தை தொடர்ந்து போட்டோஷூட் ஒன்று நிகழ்ந்துள்ளது.
போட்டோஷூட்
இந்த போட்டோஷூட்டின் போது, தன்னுடைய மனைவி லட்சுமியுடன் எனக்கு ஒரு முத்தம் கொடு என்ற தொனியில், கோபி கேட்க, மனைவியோ முத்தம் கொடுக்காமல் திரும்பி நிற்கிறார். இதனால், இன்னொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு கோபி நிற்கிறார்.
ரொமான்ஸ் தான்
அந்த நேரம் பார்த்து தன்னுடைய காதல் கணவர் சுதாகர் கன்னத்தில், லட்சுமி முத்தம் கொடுத்ததும் பேக்கிரவுண்டில் காதல் பாடல் ஒன்று ஓட ஆரம்பிக்கிறது. பல காமெடி காட்சிகளில் நாம் கண்டு பழகியுள்ள சுதாகர்,ரொமான்டிக்காக காதலை அள்ளித் தெளிக்கும் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, திருமணம் மேடையிலும் சிரித்த முகத்துடன் அதிக உற்சாகத்துடன் சுதாகர் காணப்பட்டிருந்தார். அதே போல, தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சுதாகர் நன்றிகளையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் இந்துக்களின் கதை.. படத்தை பாராட்டிய பிரதமர்! வரி விலக்கு அளித்த அரசு.. காரணம் இதோ..
காமெடி பண்ண ஆளு, இப்ப ஃபுல் ரொமான்ஸ்ல.. முத்தம் கேட்டு வெட்கப்பட்ட பரிதாபங்கள் சுதாகர் வீடியோ