Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

கைதி -2 மற்றும் கைதி ரீமேக்குக்கு கிரீன் சிக்னல்! நீதிமன்றம் கொடுத்த பரபர தீர்ப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா: கைதி-2 மற்றும் கைதி ரீமேக் படங்களுக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது.

Kaithi 2 Kaithi Remake Green Signal from Kerala Court

ரேவதி இயக்கத்தில் நம்ம கஜோல்! ஆஹா அசரவைக்கும் ஃபோட்டோவுடன் வெளியான அப்டேட்!

கடந்த 2019 தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி ‌படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு‌ இரவில் முன்னாள் ‌கைதியான‌ கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை‌ எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசால் பிடிக்கப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும்,   ஒரு‌ கான்ஸ்டபிள் 5 கல்லூரி மாணவர்களை வைத்து அந்த இரவை எப்படி கடக்கிறார்கள் என்பதையும், விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும்‌ கைதி கார்த்தி பற்றியும், படம் பேசுகிறது.

இப்படம் டைகார்ட், விருமாண்டி‌ படங்களில் இருந்தும் இன்னும் சில படங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். அவற்றில் முக்கியமான படம் Assault On Precint13 1976ல் வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.கைதி‌ படத்தில் வரும் போலீஸ் கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியமின் பெயர் நெப்போலியன்.அதே போல Assault On Precint13 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ‌நெப்போலியன். கைதி படத்தில் பிரமாதமான காட்சி என்பது கமிஷனர் அலுவலகத்தை தாக்குவது. Assault On Precint13 படத்தின் முக்கிய காட்சியும் அது தான்.

படத்தில் வரும் லாரி சம்பந்தப்பட்ட காட்சிகள் Hijack மற்றும் Wages of Fear படங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும். கார்த்தி வரும் பகுதியின் அடிநாதமான 10 வருடங்களாக சிறையில் இருந்தவர் என்பதும் குழந்தையை பார்க்காதவர்‌ என்பது‌ம்  ‌Con Air படத்தின் தாக்கத்தில் இருக்கும். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார்.

Kaithi 2 Kaithi Remake Green Signal from Kerala Court

இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு பற்றி தயாரிப்பு தரப்பு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் தொடரப்பட்ட வழக்கில் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், ‘கைதி 2’ எடுப்பதற்கும் தடை கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.

கைதி படத்தின் இந்தி ரீமேக் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ரீமேக் படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்குகிறார். அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு போலா (Bholaa) என்று தற்காலிக பெயரை படக்குழு வைத்துள்ளனர். அசீம் பஜாஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Kaithi 2 Kaithi Remake Green Signal from Kerala Court

#SK20 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் வெளிநாட்டு நடிகை! இவங்க தானா?

தொடர்புடைய இணைப்புகள்

Kaithi 2 Kaithi Remake Green Signal from Kerala Court

People looking for online information on கார்த்தி, கைதி ரீமேக், கைதி-2, லோகேஷ் கனகராஜ், Kaithi 2, Kaithi Remake, Karthi, Kerala Court will find this news story useful.