www.garudabazaar.com

சுரேஷ் சக்கரவர்த்தியை 'கலாய்த்த' பிரபலம்... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ஒருவழியாக போட்டியாளர்ளை அழவைத்த தாங்கள் கடந்து வந்து பாதை டாஸ்க் நேற்றுடன் முடிந்தது. 16 போட்டியாளர்களில் ரேகா, சனம், ஷிவானி, கேப்ரியலா, ரம்யா பாண்டியன், ஆஜித், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 8 பேரின் கதை அவ்வளவாக கவரவில்லை என பிற போட்டியாளர்கள் முடிவு செய்து அவர்களை இந்த வீட்டில் இருக்க தகுதி அற்றவர்கள் என முடிவு செய்துள்ளனர்.

Bigg Boss Tamil 4: Actor Sathish trolled Suresh Chakravarthy

இந்த நிலையில் நாளுக்குநாள் குக்கிங் டீமில் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. நேற்று ரேகா-சனம் ஷெட்டி இடையில் சண்டை வெடித்தது. குக்கிங் டீமை விட்டு விலகிய சுரேஷ் சக்கவர்த்தி காய்கறிகள் வெட்டி கொடுத்ததே காரணம் என பிறகு தெரிய வந்தது. இதனால் ரேகா-சனம் இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்க அனைத்திற்கும் காரணமான சுரேஷ் சக்கரவர்த்தி சோபாவில் காலை நீட்டி படுத்துக்கொண்டு சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து, ''கணவன் -மனைவி சண்டையின் போது ஒரு கணவன் இருக்க வேண்டிய ஏகாந்த நிலை,'' என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Actor Sathish trolled Suresh Chakravarthy

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.