'செருப்பை கூட விடல... லஞ்சம் கொடுத்து தப்பிச்சேன்!' - பிக்பாஸ் பிரபலம் தப்பித்த பரிதாப ஸ்டோரி!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின், தனது செருப்பை காப்பாற்ற லஞ்சம் கொடுத்த கதையை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதை தொடர்ந்து இவர் நடித்த விசில் படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதற்கு பின் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஷெரின், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஷெரின்னுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இந்த நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் அவரது நாய் செய்யும் செட்டைகளை பதிவிட்டு, எனது செருப்பை விட மாட்டேன் என இழுக்கிறது. இரண்டு செருப்பையை கடித்து இழுத்து கழட்டி போட்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க நாய்களுக்கான ஐஸ்க்ரீமை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது' என தெரிவித்துள்ளார். ஷெரின் தனது நாயுடன் விளையாடும் இந்த விளையாட்டை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.