ரஜினி சொன்ன கருத்து - "சபாஷ்..அப்படி வாங்க.." - கமல்! ரஜினியின் தனிவழி குறித்து பேசிய கமல்.
முகப்பு > சினிமா செய்திகள்டெல்லியில் நடந்த கலவரத்தை பற்றி நடிகர் ரஜினி கூறிய கருத்துக்கு பிறகு கமல் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக நீடித்து வருபவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஆரம்ப காலத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். சினிமாவை தாண்டி, தனிப்பட்ட முறையில் இருவரும் சிறந்த நண்பர்களாவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து ரஜினி கருத்து தெரிவித்தார். டெல்லி கலவரத்திற்கு காரணம் இன்டலிஜன்ட்ஸின் தோல்வியே, கலவரம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், மதத்தை வைத்து அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளிட்ட கருத்துக்களை ரஜினி முன்வைத்தார்.
இதையடுத்து ரஜினியின் கருத்துக்கு கமல் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி, தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி, கமல் இருவரின் ரசிகர்களுமே உற்சாகத்தில் உள்ளனர்.
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2020