www.garudabazaar.com

அதிர்ச்சியில் ரசிகர்கள்!!.. "Show-ல இருந்து விலகுறத தவிர வேற வழியே இல்ல!".. நடிகையின் Viral பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பிரபல ஜோடி விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

sofia manikandan opted out Mr and Mrs Chinnathirai விஜய் டிவி

விஜய் டிவியில் பிரபலமான பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ஹிட்டாகவும், ட்ரெண்ட் ஆகவும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் ஜோடிகள், Mr & Mrs சின்னத்திரை ஆகிய ஷோக்கள் உள்ளன. இதில் Mr & Mrs சின்னத்திரை ஷோவில் பங்கேற்ற பிரபலமான ஜோடி தான் மணிகண்டன் - சோபியா ஜோடி.

sofia manikandan opted out Mr and Mrs Chinnathirai விஜய் டிவி

இந்த நிலையில்தான் இந்த ஜோடியின் திடீர் விலகல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஷோவை விட்டு இவர்கள் ஏன் விலகி இருக்கிறார்கள் என்கிற ரசிகர்களுக்கான கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் சோபியா தம்முடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sofia manikandan opted out Mr and Mrs Chinnathirai விஜய் டிவி

இதுகுறித்த தம்முடைய பதிவில், “இப்போதைக்கு இந்த விஷயத்தை இவ்வளவு தாமதமாக சொல்வதற்கு மன்னித்து விடுங்கள். Mr & Mrs சின்னத்திரை 3ஆம் சீசனில் இருந்து ஏன் விலகி இருக்கிறீர்கள் என்று என்னுடைய இன்பாக்சுக்கு தொடர்ந்து ரசிகர்களின் அன்பான மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் உண்மையில் ஏன் இந்த ஷோவில் நாங்கள் பங்கேற்காமல் விலகினோம் என்று சொன்னால், எனக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளன. எனவே மருத்துவர்கள் என்னை முழுமையாக ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. இந்த ஷோவில் இருந்து நான் விலகி தான் ஆகவேண்டும். இருந்தாலும் நான் நிச்சயமாக வைல்ட் கார்ட் ரவுண்டில் திரும்ப வருவேன்.

sofia manikandan opted out Mr and Mrs Chinnathirai விஜய் டிவி

அனைவருக்கும் நன்றி. நல்ல இதயம் கொண்ட உங்கள் அத்தனை பேரையும் நான் மிஸ் பண்ணுகிறேன். உங்களுக்கு என் அன்பு” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், “நிச்சயமாக வைல்ட் கார்ட் ரவுண்டில் உங்களை எதிர்பார்க்கிறோம்.. அதுவரை உங்களை மிஸ் பண்ணுகிறோம்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்!!.. "SHOW-ல இருந்து விலகுறத தவிர வேற வழியே இல்ல!".. நடிகையின் VIRAL பதிவு!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sofia manikandan opted out Mr and Mrs Chinnathirai விஜய் டிவி

People looking for online information on Manikandan Rajesh, Mrandmrschinnathirai, MrMsChinnathirai, Sofia, Trending, VijayTelevision will find this news story useful.