www.garudabazaar.com

போடு! வெளியானது Beast ரிலீஸ் போஸ்டர்.. ஆயுதத்துடன் ஆக்ரோஷமாக விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளி வரும் திரைப்படம் பீஸ்ட்.

Beast Movie First Day New Release Day Poster Released

பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Beast Movie First Day New Release Day Poster Released

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 3 சிங்கிள் பாடல்களும், புரோமோக்களும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Beast Movie First Day New Release Day Poster Released

பீஸ்ட் படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை  ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கயில் கத்தியுடன், நெருப்பு பின்னணியில் விஜய் இருக்கும் புகியப்படங்கள் போஸ்டரில் உள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie First Day New Release Day Poster Released

People looking for online information on Beast, Beast FDFS, Beast Mode, Beast Review, Nelson, Pooja Hegde, Vijay will find this news story useful.