www.garudabazaar.com

20 years of imman: தமிழன் to அண்ணாத்த… ‘மாஸும் கிளாஸும்’ கலந்த பயணம்- இயக்குனர் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் இமான் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

Music Director imaan completed 20 years in cinema

வாவ்.. சதீஷ் - பவித்ரா நடித்த ‘நாய் சேகர்’…. பிரபல டிவி சேனலில் .. எதுல? எப்போ?

தமிழனில் தொடங்கிய இசைப்பயணம்…

2022 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் தமிழன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இமான். அந்த படத்தின் போது அவரின் வயது 18. மிகக்குறைந்த வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான அவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கியப் படங்களில் வரிசையாக இமானைப் பயன்படுத்திக் கொண்டார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன.

Music Director imaan completed 20 years in cinema

பிரபு சாலமன் கூட்டணி…

இமானுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பிரபு சாலமன் இயக்கிய ’மைனா’ . அந்த படத்தின் வெற்றியும் பாடல்களின் வெற்றியும் இருவரையும் கவனிக்கத்தக்க படைப்பாளிகளாக்கியது. அதன் பின்னர் இவர்கள் இணைந்த கும்கி மற்றும் கயல் படத்தின் பாடல்களும் எவர்கிரீன் பாடல்களாக அமைந்தன. அதே போல இயக்குனர் சுசீந்தரனின் ஜீவா, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் இமானின் இசை கவனத்தைப் பெற்றது. இருவரும் இணைந்து இதுவரை 6 படங்களில் பணியாற்றியுள்ளனர்.

Music Director imaan completed 20 years in cinema

விஜய், அஜித், ரஜினி…

தமிழன் படடத்துக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவான ஜில்லா படத்துக்கு இசையமைத்தார் இமான். அந்த படத்தின் மாஸ் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. விஜய்க்கு பிறகு மற்றொரு முன்னணி நடிகரான அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கு இசையமைத்தார் இமான். மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த அந்த படத்தின் ’கண்ணான கண்ணே’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார் இமான். விஸ்வாசம் படத்தின் வெற்றி இமானை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

Music Director imaan completed 20 years in cinema

20 ஆண்டு பயணம்….

இந்நிலையில் இமான் திரையுலகில் அறிமுகமாகி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த 20 ஆண்டுகளில் பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மைனா கும்கி போன்ற படங்களுக்கு கிளாஸான இசையும், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களுக்கு ஏற்ப மாஸான இசையும் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து இமானுக்கு பல திரையுலக பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Music Director imaan completed 20 years in cinema

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் வாழ்த்து…

இந்நிலையில் டிக் டிக் டிக், மிருதன் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இமானுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில் ‘தமிழன் படத்தில் இருந்து கேப்டன் படம் வரை இமானின் இசையைக் கேட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தனது இசையால் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.’ எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்துக்கு இப்போது இமான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Music Director imaan completed 20 years in cinema

”சிலிர்க்க வைக்கும் சவுண்ட் எபெக்ட்ஸ்”… பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் தெறி Glimpse!

தொடர்புடைய இணைப்புகள்

Music Director imaan completed 20 years in cinema

People looking for online information on 20 years of imman, இசையமைப்பாளர் இமான், இமான், D Imman, Music Director imaan will find this news story useful.