www.garudabazaar.com

நீங்க இப்படி சொன்னா 'அப்புறம்' எங்களுக்கு... 'மீம்' போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வாரம் எவிக்ஷன் எதுவும் நடைபெறவில்லை என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சீசனில் பெரிதாக எந்த ரகசியமும் இல்லை போல. கடந்த வாரம் முதல் போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா, நான் வீட்டுக்கு போய்ட்டேன் என போஸ்ட் போட்டதுக்கு பின்னர் தான் அவர் வெளியேறிய சம்பவம் ஒளிபரப்பானது. அதேபோல இந்த வாரமும் நடந்துள்ளது.

BB 4 Tamil: Aajeedh saved himself, meme goes viral

நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேரில் மிகவும் குறைவான வாக்குகள் வாங்கிய ஆஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை வைத்து தன்னை பாதுகாத்து கொண்டார். இதனால் இந்த வாரம் பெரிதாக எந்தவித பரபரப்பும் இல்லாமல் போய் விட்டது. இது நடைபெறுவதற்கு முன் வெளியான ப்ரோமோ வீடியோவில் அனைவரும் இடம்பெற்று இருந்ததை பார்த்து இதுக்கா இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சீங்க? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இன்று 4 மணி நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என நேற்றே அறிவித்து விட்டனர். அதோடு கிராமம், நகரம் என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து பூஜை செய்யும் வீடியோவும் வெளியாகி விட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க இப்படி எவிக்ஷன் இல்லன்னு சொன்னா ஓட்டு போட்ட எங்களுக்கு என்ன மரியாதை? என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: Aajeedh saved himself, meme goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.