அவரு கப் ஜெயிச்சா நான் 'ரொம்ப' வருத்தப்படுவேன்... இதுக்கு பேரு 'என்ன' தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு கேப்ரியலா அம்மா, ஆரி மனைவி மற்றும் மகள், ஆஜீத் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதில் ஆரியின் மகள் ரியா ஒட்டுமொத்த ஷோவையும் வேற லெவலில் எடுத்து சென்று விட்டார். அவரின் சுட்டித்தனமும், குறும்பும் பிக்பாஸையும் கவர்ந்து விட்டது. தன்னுடைய குடும்பத்தினர் வரும்போது கூட ஆரி கண்ணும், கருத்துமாக பிரீஸ் டாஸ்க்கை விட்டு விலகாமல் இருந்தார்.

Balaji Murugadoss talks about Aari Arjunan, Twitter Reacts

இந்த நிலையில் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் கார்டன் ஏரியாவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி, ஷிவானியிடம், '' ஆரி ஜெயிச்சா நான் ரொம்ப வருத்தப்படுவேன். அவரு நல்லா கேம் வெளையாடுறாரு,'' என கூறிக்கொண்டு இருந்தார். ஷிவானியிடம்  பேசுவதற்கு முன் ஆஜீத்திடம் சோம், ரியோ இருவரும் ஜெயிக்க கூடாது என பேசியிருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு பேரு டபுள் கேம் பாலாஜி என அவரை கிண்டலடித்து வருகின்றனர். மறுபடியும் மொதல்ல இருந்தா?

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss talks about Aari Arjunan, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.