'ஏன் இப்படி பண்றீங்க..'' கொரோனா வைரஸ் பாதுகாப்பு மீறல்கள்.. பேபி மானஸ்வி செம ஆவேசம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து பேபி மானஸ்வி கருத்து தெரிவித்துள்ளார். 

கரோனா பாதுகாப்பு பேபி மானஸ்வி கருத்து | baby manasvi opens about corona safety issue

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் பேபி மானஸ்வி. நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளான இவர், இதையடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இவர் பரமபதம் விளையாட்டு, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதனை மீறி பலர் வெளியில் நடமாடி வருகின்றனர். அதைக் கண்ட பேபி மானஸ்வி மிக கோபமாக பேசியுள்ளார். படிச்சவங்க தானே, ஏன் இப்படி பண்றீங்க என மானஸ்வி ஆவேசமாக பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Entertainment sub editor