www.garudabazaar.com

பாக்கியலட்சுமி, ராதிகா பாத்தா என்ன ஆகுறது?.. கோபியின் டூயட்.. மூணாவது மிஷனுக்கு தயார் ஆகுறாரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.

baakiyalakshmi gopi dance with selvi gone viral among fans

Beast: ஜாலியோ ஜிம்கானா அர்த்தம் இதானா?... 'Lyricist' கு.கார்த்திக்.. Exclusive

ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோரை ஏமாற்றி, நாடகமாடி வரும் கோபி தான் தற்போதைய டிரெண்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்.

மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்ய முனைப்பு காட்டி வருகிறார் கோபி.

டாப் கியர்'ல போகுது

இதற்கு வேண்டி, அவர் ஏகப்பட்ட நாடகங்களையும், பொய்களையும் பேசி பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகியோருக்கு இடையே, மிகப்பெரிய கேம் ஆடி வருகிறார். ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராதிகாவுடன் பழக்கத்தில் கோபி இருக்கும் நிலையில், தோழி பாக்கியலட்சுமி தான் கோபியின் மனைவி என்பது, ராதிகாவுக்கு தெரியாது.

தப்பித்து கொண்டே இருக்கும் கோபி

அதே போல, தன்னை ஏமாற்றி விட்டு, ராதிகாவை கணவர் கோபி திருமணம் செய்ய போகிறார் என்பது பாக்கியலட்சுமிக்கும் தெரியாது. ஆனாலும், சமீபகாலமாக கணவர் மீது, பாக்கியலட்சுமிக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. இருந்த போதும், எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கோபி.

baakiyalakshmi gopi dance with selvi gone viral among fans

வலுக்கும் சந்தேகம்

இன்னொரு பக்கம், ராதிகா வீட்டிற்கு வெளியே கோபி காரைக் கண்டு, பாக்கியலட்சுமி மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி செல்வி ஆகியோர், ராதிகா திருமணம் செய்ய போகும் நபர் கோபியாக இருப்பாரோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். இப்படி மீண்டும் மீண்டும் சந்தேகம் வளையத்தில் சிக்கிக் கொண்டே இருக்கும் கோபி, எப்படி தப்பித்து கொண்டே இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு

மேலும், எப்போது, எப்படி, யாரிடம் கோபி சிக்கப் போகிறாரா அல்லது, தப்பித்து விடுவாரா இனத்தில் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் அடங்கியுள்ளது. இந்நிலையில், வேலை செய்யும் பெண்மணியான செல்வி என்னும் கதாபாத்திரத்தில் வரும் நடிகையுடன் சேர்ந்து, கோபி நடனமாடிய வீடியோ, பாக்கியலட்சுமி  ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

baakiyalakshmi gopi dance with selvi gone viral among fans

செல்வியுடன் டூயட்

ஏற்கனவே, பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா இடையே ரணகளமாக கோபி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாக செல்வியுடன் டூயட் ஆடுவது பற்றி, ரசிகர்கள் நகைச்சுவையாக குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், "காத்துவாக்குல மூன்றாவது காதலா கோபி?" என்றும் ஜாலி கேள்விகளை பாக்கியலட்சுமி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

baakiyalakshmi gopi dance with selvi gone viral among fans

கோபி மற்றும் செல்வி ஆகியோர் இணைந்து ஆடும் வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"ப்பா.." அஜித் பாட்டுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் பிரபல சீரியல் & வலிமை பட நடிகை..

பாக்கியலட்சுமி, ராதிகா பாத்தா என்ன ஆகுறது?.. கோபியின் டூயட்.. மூணாவது மிஷனுக்கு தயார் ஆகுறாரோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi gopi dance with selvi gone viral among fans

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gobi, Vijay tv will find this news story useful.