IRAVIN NIZHAL
www.garudabazaar.com

'அவன் இவன்' மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ் மறைவு.. கடைசி Reels வீடியோவால் உருகும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலா இயக்கத்தில் உருவான 'அவன் இவன்' என்னும் திரைப்படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் ஈர்த்தவர் நடிகர் ராமராஜ்.

Avan ivan movie fame actor ramaraj passed away

70 வயதாகும் இவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம், திரை உலகினர் பலரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

வங்கியில் மேலாளராக இருந்த ராமராஜ்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த மேலச்சாக்குளம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கே. ராமராஜ். திரைப்படங்களில் நடிக்க வருவதற்ககு முன்பாக, கூட்டுறவு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் ராமராஜ். முன்னதாக, வங்கியில் பணிபுரியும் போது, மேடை நாடகங்களில் தோன்றி, கிராமிய பாடல்களையும் ராமராஜ் பாடி வந்துள்ளார்.

உடல்நலக் குறைவால் மறைவு

வங்கி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாலா இயக்கத்தில், ஆர்யா மற்றும் விஷால் நடித்த அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, ராமராஜுக்கு கிடைத்தது. இதன் பின்னர், சுமார் 20 படங்கள் வரை துணை மற்றும் காமெடி நடிகராக ராமராஜ் தோன்றி உள்ளார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், உடல் நலக்குறைவால், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ராமராஜ், நேற்றிரவு (11.07.2022) காலமானார்.

இதன் பின்னர், முதுகுளத்தூரில் உள்ள அவரது வீட்டில் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், சினிமா பிரபலங்கள் பலரும், ராமராஜின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடலும் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடைசி 'ரீல்ஸ்' வீடியோ

இந்நிலையில், ராமராஜ் கடைசியாக வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை சினிமா ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து மனம் உருகி வருகின்றனர். அடிக்கடி தனது ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வரும் ராமராஜ், தீவிர முருக பக்தர் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், தனது கடைசி ரீல்ஸ் வீடியோவில், முருகன் பக்தி பாடல் ஒன்றை, இறை உள்ளத்துடன் பாடும் ராமாராஜ் வீடியோவை இறுக்கமான மனதுடன் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

'அவன் இவன்' மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ் மறைவு.. கடைசி REELS வீடியோவால் உருகும் ரசிகர்கள் வீடியோ

Avan ivan movie fame actor ramaraj passed away

People looking for online information on Avan Ivan, Ramaraj will find this news story useful.