ஆர்யாவின் மிருகத்தனமான வொர்க் அவுட் வீடியோ - பா.இரஞ்சித் படத்திற்காக இத்தனை அடி வாங்குவதா..!
முகப்பு > சினிமா செய்திகள்பா.இரஞ்சித் படத்திற்காக ஆர்யா செய்யும் வொர்க் அவுட் வீடியோ தற்போது வெளியாகி வைரல் அடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருவபவர் ஆர்யா. இவர் நடித்த நான் கடவுள், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது. அண்மையில் இவர் நடித்த மகாமுனி படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ஆர்யா தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி என்கிற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தனது 30-வது படத்தில் பா.இரஞ்சித்துடன் இணைகிறார்.
இதனிடையே இத்திரைப்படத்துக்காக ஆர்யா செய்யும் வொர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. வயிற்றில் அடிவாங்கியபடி அவர் செய்யும் அப்டமன் வொர்க் அவுட் பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது. இந்த வீடியோவை பதிவிட்டு, சில நேரங்களில் சிறப்பான முடிவுகளுக்காக கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்துக்கு சல்பேட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்யா பாக்சராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sometimes u need to push Harder for Greater Results 💪💪💪#PaRanjithFilm #Arya30 #Prelook #Preplook #chennaiMMA #SanthoshMaster @beemji @K9Studioz pic.twitter.com/2dHZMRYiap
— Arya (@arya_offl) March 2, 2020