www.garudabazaar.com

சிம்பு- கௌதம் மேனன் படத்தின் பெயர் மாற்றம்! புது பெயர் இது தானா? செம தீ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என பெயரிடப்பட்டது.

SilambarasanTR ARR GVM combo next movie tittle is

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணியாற்றுகிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார்.

SilambarasanTR ARR GVM combo next movie tittle is

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைவதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

SilambarasanTR ARR GVM combo next movie tittle is

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்ப போட்டோ சூட் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

SilambarasanTR ARR GVM combo next movie tittle is

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்பதில் இருந்து புதிய தலைப்பாக பாரதியார் கவிதையில் இருந்து "வெந்து தணிந்தது காடு" என மாற்றி உள்ளனர். இதனை படக்குழு டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காதல் கதைகளமான Romance வகைமையில் இருந்து ஆக்சன் வகைமைக்கு இந்த படம் தற்போது மாறியுள்ளது என தெரிகிறது. இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி வரும் நாட்களில் வெளியாகலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

SilambarasanTR ARR GVM combo next movie tittle is

People looking for online information on A. R. Rahman, Gautham Menon, Silambarasan TR will find this news story useful.