www.garudabazaar.com

கிராமத்து கதையில் களமிறங்கும் Arya? வெளியான தகவல்.. இந்த ஹீரோ - டைரக்டர் காம்போ கூட செமயா இருக்கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிகுமார் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த குட்டிப்புலி திரைப்படம் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் முத்தையா.

Actor arya next with director m muthaiah reports

இதன் பிறகு, கார்த்தியை வைத்து 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கி இருந்த முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து 'மருது' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

கார்த்தி - முத்தையா கூட்டணியில் அடுத்ததாக விருமன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், கார்த்திக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மக்கள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

விரைவில் வெளியாகும் விருமன்?

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம், 'விருமன்' படத்தை தயாரித்துள்ளது. மேலும், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor arya next with director m muthaiah reports

முத்தையாவின் அடுத்த படம்

பொதுவாக, முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முத்தையா இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் பற்றி அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இதுவும் மற்ற முத்தையா படங்கள் போல, கிராம பின்னணி கொண்ட கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Actor arya next with director m muthaiah reports

கிராமத்து கெட்அப்பில் ஆர்யா?

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'அவன் இவன்' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் மட்டும் கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படங்களில் ஆர்யா நடித்துள்ளார்.

Actor arya next with director m muthaiah reports

அப்படி ஒரு நிலையில், முத்தையா போல முழுக்க முழுக்க கிராமத்தை மையப்படுத்தி படம் எடுப்பவரின் இயக்கத்தில் ஆர்யாவின் லுக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, தற்போதே ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

கிராமத்து கதையில் களமிறங்கும் ARYA? வெளியான தகவல்.. இந்த ஹீரோ - டைரக்டர் காம்போ கூட செமயா இருக்கே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor arya next with director m muthaiah reports

People looking for online information on Aditi Shankar, Arya, Karthi, Kutti Puli, M Muthaiah, Viruman will find this news story useful.