Reliable Software
www.garudabazaar.com

'அருண் விஜய்-ன் புதிய படம்'... பட்டாசாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம்23 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அறிவழகன்.

Arun Vijay AV31 Borrder Movie First Look released

இந்த படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய குற்றம் 23 திரைப்படமும் ஹிட்டடித்தது. இந்த திரைப்படம் அருண் விஜய்க்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் அறிவழகன் அருண் விஜய் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை 11:11 புரோடக்சன்ஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்திய எல்லையை மையமாக வைத்து சூட்டப்பட்டுள்ள தலைப்பான பார்டர் என்கிற இந்த தலைப்பு இந்தியா முழுவதற்கும் இந்த படத்தை சென்றடைய வைக்கும் என்று தெரிகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருண் விஜய் முகமும் இந்திய மேப்பும் கலந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கேசண்ட்ரா, ஸ்டெஃபி படேல் நடித்துள்ளனர்.

ALSO READ: “இங்க வந்தாப்றம் தான் சிரிக்கிறேன்!”.. CWC நிகழ்ச்சியில் குழந்தை போல் அழுத Chef தாமு!

Arun Vijay AV31 Borrder Movie First Look released

People looking for online information on Arivazhagan, Arun Vijay, Borrder, BorrderFirstLook, Regina Cassandra, Sam CS will find this news story useful.