www.garudabazaar.com

ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய வங்கதேச குட்டிச்சிறுமி.. மழலை மொழியில் “சின்னச் சின்ன ஆசை”.. Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வெவ்வேறு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் என்பதற்கு சான்றாய் மேற்கு வங்க சிறுமி ஒருவர் பாடிய பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்றடைந்து கொண்டிருக்கிறது.

ar rahman shares little girl singing china china asai viral video

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக தனது ஆரம்ப கால பயணத்தை ரோஜா, இருவர் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடங்கினார். இதில் ரஹ்மான் இசையமைத்து வெளியான முதல் படமான ரோஜா படத்துக்காக, அவர் தேசிய விருதை தட்டிச் சென்றார்.

அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்று தான் கூற வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களால் விரும்பப் பட்டது. கணினி மயப்படுத்தப் பட்ட துல்லியமான இசைக் கோர்ப்புகளால் கேட்பவருக்கு புதிய பரவசத்தை தந்தது ரஹ்மானின் இசை.

ஒரு கட்டத்தில் இந்திய அளவில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் பாலிவுட்டிலும் உலக அளவிலும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் பல ஹிட் ஆல்பங்களை கொடுத்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல், பிகில் படங்களாகட்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படமாகட்டும், மணிரத்னத்தின் ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம் படங்களாகட்டும், இவை அனைத்திலும் ரஹ்மானின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. இவை மட்டுமல்லாது அண்மையில் ரஹ்மானே கதை எழுதி, தயாரித்து இசையமைத்த 99 சாங்ஸ் படமும் வெளியானது.

இந்நிலையில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வருகிறார். அந்த வீடியோவில் மழலை மொழியில் மேற்கு வங்க சிறுமி ஒருவர், ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலை ஹிந்தி மற்றும் தமிழில் மிக அழகாக பாடுகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த சிறுமியை வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோவை பல லட்சம் பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

Also Read: “வாழு, வாழ விடு... நிபந்தனையற்ற அன்பை உரித்தாக்குகிறேன்!” - அஜித் பரபரப்பு அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

ar rahman shares little girl singing china china asai viral video

People looking for online information on AR Rahman, Trending will find this news story useful.