www.garudabazaar.com

''இதனால எனக்கு தொடர்ந்து மெசேஜ்கள் வந்துட்டே இருக்கு.. ஏன் இப்படி.?!" - பிரபல நடிகை அதிருப்தி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். 

தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பிரபல நடிகை பதில் | Actress Payal Rajput Opens on Rumors about Kamal's Indian 2 Movie

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் பாயல் ராஜ்புத். இதையடுத்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த ஆர்.எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் ரவி தேஜா ஜோடியாக டிஸ்கோ ராஜா திரைப்படத்தில் நடித்தார். தமிழில் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல் திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தன்னை பற்றி வரும் வதந்திள் பற்றி பாயல் ராஜ்புத் தனது பளீச் கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னை பற்றி எப்படி இந்த வதந்திகள் வருகின்றது என தெரியவில்லை. இந்தியன் 2, புஷ்பா, இந்த படங்களில் நான் எந்த பாடலுக்கு ஆடவில்லை. அப்படியான அழைப்புகள் எதுவுமே வரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக, எனக்கு இதுபற்றி மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கின்றது. தயவு செய்து பொய் செய்திகளை நம்பாதீர்கள். நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறான். அப்படி நான் நடிப்பது உறுதியானால், கண்டிப்பாக ரசிகர்களிடம் வெளிப்படையாக சொல்லுவேன்'' என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் பாயல் ராஜ்புத், 

 

தொடர்புடைய இணைப்புகள்

தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பிரபல நடிகை பதில் | Actress Payal Rajput Opens on Rumors about Kamal's Indian 2 Movie

People looking for online information on Indian 2, Kamal Haasan, Payal rajput, Rumors will find this news story useful.