www.garudabazaar.com

சூ* வெப்பாங்க, போடா *.. அனிதாவா இப்படி பேசுறது? அக்னி குண்டமான Bigg Boss Ultimate வீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

anitha words in biggboss ultimate set shocked fans

காமெடி பண்ண ஆளு, இப்ப ஃபுல் ரொமான்ஸ்ல.. முத்தம் கேட்டு வெட்கப்பட்ட பரிதாபங்கள் சுதாகர்

இதில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன், சமீபத்தில் முடிவடைந்திருந்தது. இதன் முடிவில், ராஜு முதலிடத்தை பிடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் தொடர் தற்போது தமிழ் போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட்

கடந்த ஐந்து சீசன்களில் போட்டியாளர்களாக வந்தவர்களின் பட்டியலில் இருந்து, போட்டியாளர்களைத் தேர்வு செய்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், வனிதா போட்டியின் பாதியில் விலக, சுரேஷ் சக்கரவர்த்தி, KPY சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர், வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்தனர்.

பஞ்சமில்லை

விஜய் டிவியில் தினந்தோறும் சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த அளவுக்கு மாறி மாறி போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் வேளையில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில், மாறி மாறி போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அதிகம் இருப்பதால், கண்டென்டிற்கும் பஞ்சமே இல்லை.

anitha words in biggboss ultimate set shocked fans

அனிதா குறித்த பார்வை

அதிலும் குறிப்பாக, அனிதாவின் பெயர் தான் இந்த முறை அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நான்காம் சீசனில், பிக்பாஸ் போட்டியாளராக வந்த அனிதா, அந்த சமயத்தில் நல்ல பெயர் எடுத்திருந்தார். ஆனால், அல்டிமேட் நிகழ்ச்சியிலோ பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

ஜூலியுடன் மோதல், மற்ற போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து கருத்து சொல்வது என அனிதாவின் பல செயல்கள், ரசிகர்கள்  மத்தியில் விமர்சனத்தினை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

anitha words in biggboss ultimate set shocked fans

கெட்ட வார்த்தை

பிக்பாஸ் வீட்டின் லிவிங் ஏரியாவில், நிரூப் மற்றும் அனிதா ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அனிதாவிடம், "அந்த ரெண்டு பாட்டில் எடுத்து இங்க வை" என நிரூப் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அனிதாவோ, "சூ*ல வைப்பாங்க. நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கள வைக்க சொல்லு. போடா *" என கெட்ட வார்தைகளை இணைத்து பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அனிதாவின் பேச்சு பற்றி, பிக்பாஸ் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

”ஜூலிக்கு டோஸ் விட்ட பிக்பாஸ்”.. கன்பெஷன் ரூமில் சொன்ன வார்னிங்கே கொடுத்துட்டாரு மனுசன் BBUltimate

தொடர்புடைய இணைப்புகள்

anitha words in biggboss ultimate set shocked fans

People looking for online information on Anitha Sampath, BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Vijay tv will find this news story useful.