www.garudabazaar.com

ஷிவானி வெளில போய்ட்டா... பாலாஜியோட 'ஸ்ட்ராட்டஜி' இப்படித்தான் இருக்கும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று வழக்கம்போல பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் பெர்பாமர்களை தேர்வு செய்யும் நாள். பெரிய சண்டைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, சிலபல முட்டல், மோதல்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான நபர்கள் பாலாஜி, அர்ச்சனா இருவரும் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தனர். எதையும் மாற்றி யோசிக்கும் பாலாஜி இந்த டாஸ்க்கிலும் அதையே கடைபிடித்தார்.

Anitha Talked about Balaji's Next move in BB House

நன்றாக விளையாடிய அனிதாவை ஒர்ஸ்ட் பெர்பாமர் என்றும் மோசமாக விளையாடிய ஷிவானியை பெஸ்ட் பெர்பாமராகவும் தேர்வு செய்தார். இதற்கு அனிதா விளக்கம் கேட்க நீங்க வந்ததுல இருந்து பாத்ரூம் கிளீன் பண்ணல என ஒரு காரணத்தை சொன்னார். எனினும் கடைசியில் ஷிவானி மற்றும் கேப்ரியலா இருவரும் ஒர்ஸ்ட் பெர்பாமர்களாக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸால் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆரி, அனிதா இருவரும் வீட்டுக்குள் வெளியில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது அனிதா, '' ஷிவானி மட்டும் வெளில போய்ட்டா பாலாஜி கண்டிப்பா லவ் பெட்ல போய் சேந்துருவான்,'' என கருத்து தெரிவித்தார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஷிவானி இருக்கிறார். அவர் வெளியில் அனுப்பப்படுவாரா? அனிதா சொன்ன ஆரூடம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

தொடர்புடைய இணைப்புகள்

Anitha Talked about Balaji's Next move in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.