Pisasu 2
www.garudabazaar.com

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு -2.. வெளியான திகில் நிறைந்த டீசர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

Also Read | கத்ரினா கைஃப் போட்டோவுக்கு பஃயர் விட்ட பிரியங்கா சோப்ரா! இது தான் காரணமா? பின்னணி தகவல்

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் நாள் வெளியானது.

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

இந்நிலையில் பிசாசு-2 படத்தின் டீசர் இன்று ஏப்ரல் 29) மாலை 5 மணிக்கு வெளியாகி உள்ளது. மேலும் டீசர் தென்னக மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியாகி உள்ளது. டீசரில் ஒரு வசனம் கூட இடம் பெறாமல், காட்சி மொழி வாயிலாக, எடிட்டிங்க், பின்னணி இசை, ஒளிப்பதிவு, வண்ணக்கலவை, கேமரா கோணம், வெளிச்சம் ஆகியவற்றைக் கொண்டு புது வித அனுபவத்தை படக்குழு கொடுத்துள்ளது.

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

டீசரில் ஆண்ட்ரியா, பூர்னா, விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு -2.. வெளியான திகில் நிறைந்த டீசர் வீடியோ! வீடியோ

Myskin Andrea Jeremiah Starring Pisasu 2 Movie Teaser

People looking for online information on Andrea Jeremiah, Myskin, Pisasu 2 Movie, Pisasu 2 Movie Teaser, Pisasu 2 Movie Updates will find this news story useful.