திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி - அதுவும் கட்டணமில்லாமல் ... ஆந்திரா அரசு அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 4வது முறையாக ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்பட படத்தொகுப்பு, பின்னணி இசை அமைத்தல் போன்ற பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Andhra Pradesh Government issues statement about Film shooting | திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவது குறித்து ஆந்திர அரசு அதிரடி அற

இதனையடுத்து திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த தயாரிப்பாளர்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதன் படி ஆந்திரா அரசு திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது.

மேலும் அதிக திரைப்படங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க கட்டணமில்லாமல் அனுமதியளிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானதும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது உறுதி. இருப்பினும் எப்பொழுது படப்பிடிப்பு தொடங்கலாம், மற்ற கட்டுப்பாடுகள் என்னென்ன என்பவை போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Entertainment sub editor