Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Behindwoods டிஜிட்டல் விருது வாங்கிய ஆங்கர் டிடி... டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த டாப் நடிகர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

Anchor DD gets special appreciation from popular actor விருது வாங்கிய ஆங்கர் டிடி

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

Anchor DD gets special appreciation from popular actor விருது வாங்கிய ஆங்கர் டிடி

இந்நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு அறிமுகம் என்பது தேவையில்லை. 90ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2k கிட்ஸ்கள் வரை பலரது பேவரைட் தொகுப்பாளராக இன்றுவரை நிலைத்து நிற்கிறார். கிட்டதட்ட இருபது வருடங்களாக கலைத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு தொலைக்காட்சித் துறையின் கோல்டன் ஐகான்  விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது Behindwoods. இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது "இந்த விருதை வாங்கியது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுவும் என்னைவிட என் வெற்றியை நேசிக்கும் இருவர் கையில் இருந்து வாங்கியது இன்னும் பெருமை. மிக்க நன்றி Behindwoods. நெகிழ்ச்சியான தருணம்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இந்த பதிவிற்கு மறுபதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "வாழ்த்துக்கள் டிடி. இன்னும் நிறைய விருதுகள் வாங்கணும்" என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

Anchor DD gets special appreciation from popular actor விருது வாங்கிய ஆங்கர் டிடி

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.