"என் பையன் ஆண்ட்ரியாஸ் முன் வாழ்க்கை" - எமி ஜாக்சன் உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான 'மதராஸப்பட்டினம்' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவர் 'தாண்டவம்', 'ஐ', 'தங்க மகன்', 'கெத்து', 'தெறி' என தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

அன்னையர் தினத்தில் தனது மகன் குறித்து எமி ஜாக்ஷன் உருக்கமான பதிவு | Amy Jackson emotional note about her son Andreas for Mothers day

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். George Panayiotou என்பவரை காதலித்து வருவதாக அறிவித்த எமிக்கு தற்போது, தற்போது ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இங்கிலாந்தில் நேற்று (மார்ச் 22) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் முதல் அன்னையர் தினத்தில் இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் பையன் ஆண்ட்ரியாஸ் முன், இந்த வாழ்வு எனக்கு நியாபகம் இருப்பதில்லை.  அவனது முகம், கண்ணம், சிறிய சிரிப்பை பார்க்கும் போது ஒவ்வொரு காலையும் எனக்கு தூய்மையான தியானம் போன்றது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது அம்மா குறித்து, ''நீ தான் எனக்கு உண்மையான இன்ஸ்பிரேஷன். என்னிடம் எல்லையற்ற அன்பு காட்டியதற்கு நன்றி. உங்கள் இருவரையும் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக நேசிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். தனது மகன் மற்றும் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor