எமெர்ஜென்சி : டாக்டராக மாறிய தொகுப்பாளினி அனிதா சம்பத்... வைரலாகும் புதிய டீஸர் ..!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல செய்தி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் நடிகை அனிதா சம்பத். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் தனது காதலரை அனிதா கைப்பிடித்தார். பெற்றோர் சம்மதத்துடன் இவரது திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் தனது வழக்கமான தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 'எமெர்ஜென்சி' என்ற அந்த தொடரில் வி.ஜே.ஆனந்தி, அனிதா சம்பத் மற்றும் ஸ்ரீஜா மூவரும் மருத்துவர்களாக நடிக்கின்றனர்.
இந்த டீசர் இப்போது இருக்கும் கொரோனா பீதிக்கு ஒத்து இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இந்த தொடர் எப்படி இருக்க போகிறது என்று..!
Tags : Anitha sambath, Emergency