‘பான் மசாலா விளம்பரம்’.. பிறந்த நாளில் அமிதாப் முடிவு!.. அட்வான்ஸை திருப்பி தந்து அதிரடி!
முகப்பு > சினிமா செய்திகள்தனது அடுத்த படத்தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் என்பவரி2ன் பண்ணை வீட்டில் தனது சினிமா நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய அமிதாப் பச்சன், தனது இன்ஸ்டாகிராமில் தான் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில், 80வது வயதுக்குள் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருந்தார்.
![Amitabh Bachchan terminates pan masala ad from 80th birthday Amitabh Bachchan terminates pan masala ad from 80th birthday](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/amitabh-bachchan-terminates-pan-masala-ad-from-80th-birthday-photos-pictures-stills.jpg)
மேலும் தமது இந்தப் பிறந்தநாளில் சமுதாய நலன் கருதி ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று, தான் நடித்து வந்த பான் மசாலா விளம்பரத்தின் காண்ட்ராக்டில் இருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.79 வயதாகிவிட்ட அமிதாப்பச்சன் எப்போதும் துடிப்புடனும், இளமையுடனும் ஆக்டிவாக இருக்கிறார். இன்றும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கமலா பசந்த் என்ற பான்மசாலா விளம்பரத்தில் நடித்து வந்த, அமிதாப் பச்சனிடம், இந்த விளம்பரம் இளைஞர்களை புகையிலைப்பழக்கத்திற்கு தூண்டுவதாக இருக்கிறது என்றும், பணம் சம்பாதிப்பதை விடவும் அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய மக்களின் உடல்நலம் முக்கியம் இல்லையா? என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களின் கருத்துக்கும் கோரிக்கைக்கும் செவி சாய்த்த நடிகர் அமிதாப் பச்சன், கமலா பசந்த் பான் மசாலா விளம்பரத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதுடன், அக்கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளார்.
மேலும் அந்த பான் மசாலாவை விளம்பரத்துக்காக வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டதாக அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் அலுவலகத்தில் இருந்தும் இதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமிதாப் பச்சனின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.