www.garudabazaar.com

நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே மரணம்.. அமெரிக்க இளம் நடிகருக்கு நேர்ந்த பெரும் சோகம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜேன்சன் பனெட்டீர் தம்முடைய இளம் வயதிலேயே மரணத்தை தழுவி இருப்பதாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

American actor Jansen Panettiere passes away aged 28

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான இவரது சடலம் மர்மமான முறையில் மீட்கப்பட்டிருக்கிறது. பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீர் சகோதரரான இவர் திடீரென மரணம் அடைந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் பலராலும் பெரும் துக்கமாக பார்க்கப்படுகிறது.

American actor Jansen Panettiere passes away aged 28

குறிப்பிட்ட ஒரு விடுதியில் மரணம் அடைந்திருந்த இவரை காண்பதற்கு வர்த்தக விஷயமாக இவருடைய நண்பர் வந்ததாகவும் அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் இவர் உயிரிழந்து இருந்ததாகவும் அந்த நபர் தகவல் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இவருடைய மரணத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

தி வாக்கிங் டெட் , ஐஸ் ஏஜ் தி மெல்ட்டவுன் உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பெருமை அடைந்த 28 வயதான இளம் நடிகர் நடிகர் ஜேன்சன் பனெட்டீரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

American actor Jansen Panettiere passes away aged 28

People looking for online information on Jansen Panettiere, RIP Jansen Panettiere will find this news story useful.