www.garudabazaar.com

LATEST : பிரபல ஹீரோவின் Most Wanted படத்தை.., பெரிய தொகை கொடுத்து வாங்கிய அமேசான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோவின் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

நானி படத்தை வாங்கிய அமேசான் | Amazon Prime buys Nani v Movie for a high price

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த நான் ஈ, ஜெர்ஸி, கேங்லீடர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இதனிடையே தற்போது நானி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'வி'. மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதாரி, சுதீர் பாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் மாதம் ரிலீஸாக வேண்டியிருந்த இத்திரைப்படம், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போனது. 

நானி படத்தை வாங்கிய அமேசான் | Amazon Prime buys Nani v Movie for a high price

இந்நிலையில் தற்போது வி திரைப்படத்தை நேரடியாக OTT-ல் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதையடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 32 கோடிகள் அளவில், இத்திரைப்படத்தின் உரிமை விற்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று அமேசானில் வெளியாகியுள்ளதாம் நானியின் வி. தியேட்டர்கள் திறந்த பின்னர், நேரடி ரிலீஸ் திட்டமும் இருக்கிறதாம். 

 

நானி படத்தை வாங்கிய அமேசான் | Amazon Prime buys Nani v Movie for a high price

People looking for online information on Amazon Prime, Nani, Nivetha Thomas, V The Movie will find this news story useful.