அமலாபாலின் 'ஆடை'-க்கு கிடைத்த ஏ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Amala Paul’s Aadai gets ‘A’ certificate

அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தின் முதல் தோற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள்  வன்முறை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்தனர்.

யூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.