அமலா பாலின் புது அவதாரம்- டர்பன் சீக்ரெட் என்னவா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை அமலா பால், நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘கடவர்’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

Amala Paul turns Producer, she wore a turban makeover during the pooja ceremony

‘ராட்சசன்’ திரைப்படத்திற்கு பிறகு, தமிழில் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ உள்ளிட்ட படங்களிலும், ‘ஆடுஜீவிதம்’ உள்ளிட்ட சில மலையாள திரைப்படங்களிலும் அமலா பால் பிசியாக நடித்து வருகிறார்.

இதனிடையே, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நடிகை அமலா பால், ‘கடவர்’ என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இதில் தடயவியல் நிபுணராக நடிகை அமலா பால் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் நடிகை அமலா பால் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது. கடவர் படத்தின் பூஜை புகைப்படங்களில் அமலா பால் தலையில் டர்பன் சுற்றியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

'கடவர்' படத்தில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலர் அமலா பாலுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.